சின்னத்தடாகம் மேல்பகுதி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது
சின்னத்தடாகம் மேல்பகுதி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது
துடியலூர்
கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை ஆனைகட்டி, பொன்னூர், மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கோடை காலத்தில் வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் போது யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.
இதனால் சில நேரங்களில் விலங்கு- மனித மோதல் நடக்கிறது.
இந்த நிலையில் கோவையை அடுத்த சின்னத்தடாகம் மேல்பகுதி ரங்கநாதர் கோவில் செல்லும் வழியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.
இது குறித்த தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தனர்.
அங்கு யானையின் உடல் மிகவும் பருத்த நிலையில் இருந்தது. இதனால் அந்த யானை இறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.
அந்த யானை எப்படி இறந்தது என்பது தெரிய வில்லை. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் கூர்ஆய்வு செய்தபிறகு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.