பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு
பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி வெண்மதி (வயது 54). இவர் அந்த பகுதியில் கியாஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் உள்ள தனது மகனை பார்க்க சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த நகை, வைர கம்மல் உள்பட 7 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் ரூ.25 ஆயிரம் ஆகியவை திருடு போனது.
மேலும் வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வீட்டில் பதிந்து இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.