தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

விளாத்திகுளம் அருகே தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-05 14:50 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விளாத்திகுளம் - எட்டயபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் முத்துராஜ் (வயது 22) மற்றும் அயன் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த பட்சிபெருமாள் மகன் முருகன் (53) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜ், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்