குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2022-05-05 14:29 GMT
கோபால்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை அடுத்த மணியகாரன்பட்டியை சேர்ந்தவர் மருதமுத்து. இவரது மகன் சபரிவாசன் (வயது 13) அதே ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் படித்து வந்தான். நேற்று  மாலை பள்ளி முடிந்து சபரிவாசன் நண்பர்களுடன் மணியகாரன்பட்டி அருகிலுள்ள பாறைக்குளத்தில் குளிக்க சென்றான்.
அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற சபரிவாசன் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து அவனது நண்பர்கள் கூச்சல் போட்டனர். இந்த சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சபரிவாசனை மீட்டு சிகிச்சைக்காக கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவன் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து சபரிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்