முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

திட்டச்சேரியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சாமி வீதி உலா நடந்தது.

Update: 2022-05-05 14:10 GMT
திட்டச்சேரி:
திட்டச்சேரியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சாமி வீதி உலா நடந்தது. 
முத்துமாரியம்மன் கோவில் 
திட்டச்சேரியை அடுத்த கொந்தகையில் முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந்தேதி   காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தல், அக்னி கப்பரை வீதிஉலா, சக்தி கரகம் வீதி உலா நடைபெற்றது. 
சாமி வீதி உலா 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் முத்து மாரியம்மன், மன்னப்ப அய்யனார் சாமிகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.
--

மேலும் செய்திகள்