ஆத்தூர் அருகே கார்- மொபட் மோதல்; கல்லூரி மாணவர் பலி-நண்பர்கள் 2 பேர் படுகாயம்

ஆத்தூர் அருகே கார்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-04 22:46 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே கார்- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கல்லூரி மாணவர்கள்
கள்ளகுறிச்சி மாவட்டம் எறவா மேலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பிரதீப் (வயது 22). இவருடைய நண்பர்கள் பாலு (21), சந்துரு (21). இவர்கள் 3 பேரும் ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.
3 பேரும், சேலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு கேட்டரிங் வேலைக்கு சென்று விட்டு ஆத்தூர் நோக்கி மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். ஆத்தூர் கோட்டை புறவழிச்சாலை பாலம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார், மொபட் மீது மோதியது.
பலி
இதில் பிரதீப் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்