தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

தென்காசி தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

Update: 2022-05-04 22:42 GMT
தென்காசி:
தென்காசி கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் தம்பிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. கோவிலில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதிஉலா, மாவிளக்கு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் காலை 8.30 மணிக்கு முடிவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்ட விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தேர் வரும் பாதையில் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றினர். 

மேலும் செய்திகள்