கஞ்சா விற்ற ரவுடிகள் 4 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்ற ரவுடிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை செல்லூர் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் 4 பேர் அங்கிருந்து தப்பி ஒட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் செல்லூர் அருள்தாஸ்புரம் ஹரிஹரன் (வயது 20), பழங்காநத்தம் ஆகாஷ், கீழவைத்தியநாதபுரம் அழகுபாண்டி (22), மேலப்பொன்னகரம் 2-வது தெரு கொம்பன் (19) என்பதும், பிரபல ரவுடிகளான இவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.