கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-05-04 21:15 GMT
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு வழிபாடு முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். 
நேற்று காலை கோவில் நிர்வாகி வேணுகோபாலன் நாயர் கோவிலுக்கு வந்தபோது ஆலயத்தின் உள்ளே உண்டியல் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் கோவில் உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேணுகோபாலன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்