டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 23 பவுன் நகை, பணம் திருட்டு

இளையான்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 23 பவுன் நகை , பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-04 20:02 GMT
இளையான்குடி, 
இளையான்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 23 பவுன் நகை , பணம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரி
இளையான்குடி அருகே உள்ள  சாலைக்கிராமம் மேலத் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் சண்முகராஜா (வயது42). இவர் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது  வீட்டில் உள்ள பீரோவில் பணம் எடுத்துவிட்டு சாவியை பூட்டாமல் பீரோவில் வைத்துவிட்டு கேரளாவிற்கு சவாரி சென்றுள்ளார். 
வீட்டில் சண்முகராஜாவின் மனைவி நாகஜோதி அவரது மாமனார் காந்தி ஆகிய 2 பேரும் இருந்துள்ளனர். நேற்று நாகஜோதி பீரோவில் பணம் எடுக்க சென்றபோது பீரோ பூட்டிய நிலையில் சாவி இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் பீரோவின் பூட்டை உடைத்து பார்த்தபோது உள்ளே  வைத்திருந்த 23 பவுன் தங்க நகையும், ரூ. 10 ஆயிரம் திருடு போனது தெரிய வந்துள்ளது. வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. 
புகார்
திருட்டு சம்பவம் தொடர்பாக சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் நாகஜோதி புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்