கர்நாடக தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக தமிழரான ஹரிசேகரன் நியமனம்

கர்நாடகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா்கள். தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக தமிழரான ஹரிசேகரனை நியமித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-05-04 19:58 GMT
ஹரிசேகரன்
பெங்களூரு: கர்நாடகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா்கள். தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக தமிழரான ஹரிசேகரனை நியமித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடிக்கடி பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் நியமன கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த அம்ரித் பவுல் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தாா். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று 3 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மக்கள் உரிமை அமலாக்கப்படை போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த ரவீந்திரநாத் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல், காத்திருப்போர் படடியலில் இருந்த கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருண் சக்கரவர்த்தி மக்கள் உரிமை அமலாக்கப்படை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக...

கர்நாடகத்தில் போலீஸ் பயிற்சி பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தவர் ஹரிசேகரன்.தமிழரான இவர், பணி இடமாற்றம் செய்யப்பட்டு தீயணைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். 
இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்து வரும் கமல்பந்தை மாற்றவும் அரசு ஆலோசித்து வருகிறது. 

கூடிய விரைவில் அவர் மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீஸ் கமிஷனர் பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான தயானந்த், அலோக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்