அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
காட்டுப்புத்தூர், மே.5-
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகர் பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் தேரை சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் ஆளத்துறை பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். நேற்று கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிதார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சித்திரை திருவிழாவை முன்னிட்டு முசிறி காமராஜர் காலனி முத்துமாரியம்மன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை பூசாரி மருதமுத்து நடத்தினார். இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.