துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்
கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் நகராட்சி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கம் சார்பில் நகராட்சி தலைவர் சாந்தியிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 27 மாதங்களுக்கான அரியர்ஸ் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், அரசு விடுமுறை நாட்களில் பணி செய்யும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் ஈடு செய் விடுப்பு வழங்கவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.