பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெயிண்டர் மீது வழக்கு
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெயிண்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை,
குளித்தலை மலையப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 37). இவர் சம்பவத்தன்று பிளஸ்-2 மாணவி நடந்து சென்று கொண்டிருந்தபோது தவறான நோக்கத்துடன் அவரை பின்தொடர்ந்து சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோபி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.