குரான் ஓதும் போட்டி

குரான் ஓதும் போட்டி நடந்தது.

Update: 2022-05-04 18:13 GMT
பனைக்குளம், 
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இருமேனி கிராமத்தில் அல் மத்ரஸதுல் கைராத்துல் அஸீஸிய்யா அரபி பாடசாலையின் 135-வது ஆண்டுவிழா மற்றும் புனித லைலத்துல் கத்ரு இரவை யொட்டி மாணவ-மாணவிகளுக்கான குரான் ஓதும் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கான பரிசளிப்புவிழா ஜாபர் சாதிக், அபுல் ஹஸன் ஆகியோர் முன்னிலையில், ஜமாஅத் தலைவர் சீனி முகம்மது தலைமையில் நடை பெற்றது. முஹம்மது உமர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்துல் ஹக் இஸ்லாமிய கீதம் பாடினார். மீரா ஹுசைன் வரவேற்றார். நல்லாசிரியர் அன்சாரி, மவுலவி நெய்னா முகம்மது வாஹிதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். குரான் தர்ஜமா போட்டியில் மாணவி அப்ரா இல்மியா முதல் பரிசை வென்றார். மாணவி நஜ்வா 2-ம் பரிசையும், மாணவர் சீனி ஹசனுதீன் மூன்றாம் பரிசையும் வென்றனர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உள்ளூர் பிரமுகர்கள் விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை பரிசு வழங்கி பாராட்டினர். முடிவில் மவுலவி அகமது ஜலாலுதீன் ரஷாதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்