ஓசூர் பகுதியில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
ஓசூர் பகுதியில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
ஓசூர்:
ஓசூர் பகுதியில் நேற்று மாலை, பலத்த இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. மேலும், பாகலூர் ரோடு சர்க்கிள், பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மற்றும் ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட நகரின் முக்கியமான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர். கனமழையை தொடர்ந்து, இரவு வரை பரவலாகவும், விட்டுவிட்டும் மழை பெய்தவாறு இருந்தது.