ஆற்காடு அருகே தாமிர கம்பி திருட்டு
ஆற்காடு அருகே தாமிர கம்பியை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு
ராணிப்பேடை்ட மாவட்டம் ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே எடைமேடை நடத்தி வருகிறார். மேலும் அதன் அருகே புதிதாக கடைகளும் கட்டி வருகிறார். புதிதாக கட்டி வரும் கடைகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு வீட்டுக்கு வந்தார்.
சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் எடை மேடைக்கு சென்றார். அப்போது புதிதாக கட்டிவரும் கடையின் ஷட்டர் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அதில் வைத்திருந்த தாமிர கம்பி திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மனோகரன் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.