அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் பணியிடை நீக்கம்

ஆய்வின்போது குழந்தைகள் இல்லாததால் அங்கன்வாடி ஊழியர், உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-05-04 17:26 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வேப்பூர் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் தவிர குழந்தைகள் இல்லாததை பார்த்து ஊழியர் மற்றும் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். 

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் காந்திநகர் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

மேலும் செய்திகள்