கோவில் கும்பாபிஷேகம்

செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-05-04 17:17 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தில் உள்ள  செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை யொட்டி காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். பின்னர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் பாம்பூர் ஊராட்சி தலைவர் சகுந்தலா ரவீந்திரன், வக்கீல் சங்கர லிங்கம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கோவில் பூசாரி கணேசன் உள்பட அனைத்து சமுதாய பிரமுகர்கள், பொதுமக்கள், கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்