குளத்தில் மாடுகளை குளிப்பாட்டியபோது தண்ணீரில் மூழ்கி விவசாயி சாவு

பழனியில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டியபோது தண்ணீரில் மூழ்கி விவசாயி பலியானார்.

Update: 2022-05-04 14:51 GMT
பழனி:
பழனி காமராஜபுரத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 65). விவசாயி. இவர், தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர், மேய்ச்சலுக்காக மாடுகளை பழனி வையாபுரிக்குளக்கரை பகுதிக்கு ஓட்டி சென்றார். ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் கிடைக்காததால் பழனி டவுன் போலீசில் புகார் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வையாபுரிக்குளத்தில் காமாட்சி பிணமாக மிதப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் காமாட்சியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், மாடுகளை குளிப்பாட்ட குளத்தில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி காமாட்சி இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்