அகரக்கொந்தகை பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

அகரக்கொந்தகை பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-04 14:12 GMT
திட்டச்சேரி:
அகரக்கொந்தகை பிடாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பிடாரி அம்மன் 
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகையில் பிடாரி அம்மன், வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 
அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி  காவடி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். 
தேர்த்திருவிழா 
விழாவில்  முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மூன்று தேர்கள் வீதி உலா, எல்லை சுற்றுதல், தேர் முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
தொடர்ந்து இரவு பூத சிலைகள் வீதிஉலா, வேண்டுதல் சிலைகள் வீதிஉலா மற்றும் மூன்று தேர்கள் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அகரக்கொந்தகை கிராமமக்கள் செய்திருந்தனர்.
--

மேலும் செய்திகள்