நண்பரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

தூத்துக்குடியில் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-04 12:25 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திமுத்து. இவருடைய மகன் சிவலிங்கம் (வயது 35). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் முத்துக்குமார் (32) என்பவரும் நண்பர்கள். கடந்த 2.4.2022 அன்று பிரையண்ட் நகர் சந்திப்பு பகுதியில் 2 பேரும் மது குடித்து உள்ளனர் அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து சிவலிங்கம், தனது தம்பி சுயம்புலிங்கத்திடம் கூறி உள்ளார். 
இதனால் சுயம்புலிங்கம், முத்துக்குமாரை சந்தித்து சத்தம் போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், சுயம்புலிங்கத்தை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்