வடமாநில வாலிபா் ஏரியில் மூழ்கி பலி

பாணாவரம் அருகே மீன் பிடிக்க சென்ற வடமாநில வாலிபா் ஏரியில் மூழ்கி பலியானார்.

Update: 2022-05-04 11:28 GMT
காவேரிப்பாக்கம்

மத்தியபிரதேச மாநிலம், சித்தி பகுதியை சேர்ந்த ராமலாலுகேவட் என்பரின் மகன் ராகுல்கேவட் (வயது 30). இவர் சென்னை பெங்களூரு பசுமை வழி சாலை அமைக்கும் பணிக்காக பாணாவரம் அருகே தங்கி உள்ளார். இந்தநிலையில் மகேந்திரவாடி ஏரியில் மீன்பிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஏரியில் முழங்கால் அளவே தண்ணீர் இருந்ததால் தண்ணீரில் இறங்கி சிறிது தூரம் ஏரிக்குள் நடந்து சென்றுள்ளார். 

அப்போது ஏரியில் தோண்டபட்டிருந்த கிணறு நீரில் மூழ்கி இறந்தது தெரியாமல் அதற்குள் மூழ்கிவிட்டார். இது குறித்து சோளிங்கர் தீயணைப்பு துறையினருக்கும், பாணாவரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தீயணைப்பு துறையினர் ராகுல்கேவட் உடலை மீட்டனர். உடலை பாணாவரம் போலீசார் பிதே பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்