ஏற்காடு அருகே சாலையில் அமைக்கப்பட்ட இரும்பாலான கதவு அகற்றம்

ஏற்காடு அருகே சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இரும்பாலான கதவு அகற்றப்பட்டது.

Update: 2022-05-03 23:38 GMT
ஏற்காடு:
ஏற்காட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் சுரைக்காய்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர்  சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட சாலையை பயன்படுத்தக்கூடாது என்று ஒரு தரப்பினர் இரும்பு கம்பியால் கதவு (கேட்) அமைத்து பூட்டி விட்டனர். இதனால் நாங்கள் சாலையை அவசர காலத்துக்கு கூட பயன்படுத்த முடியவில்லை என்று கூறி இருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று இரும்பு கம்பியால் ஆன அந்த கதவை அகற்றினார்.

மேலும் செய்திகள்