போகர் மகரிஷி கோவிலில் சிறப்பு வழிபாடு
போகர் மகரிஷி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காட்டுப்புத்தூர்:
தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள போகர் மகரிஷி கோவிலில் பரணி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் போகர் மகரிஷிக்கு மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திருச்சி, கரூர், மானாமதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.