விபசார வழக்கில் கைதான பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விபசார வழக்கில் கைதான பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-03 23:31 GMT
திருச்சி:
திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சோதனை நடத்தியதில் கதிர்வேல்(வயது 33) மற்றும் ராணி (51) ஆகியோர் 4 இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் தொடர்ந்து இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பற்றி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையின்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இது குறித்த நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிர்வேல், ராணி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்