தற்கொலைக்கு முன் போலீஸ் ஏட்டு உயர் அதிகாரியுடன் பேசிய செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பு

உடுப்பி போலீஸ் ஏட்டு தற்கொலை செய்வதற்கு முன் உயர் அதிகாரி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2022-05-03 20:53 GMT
உடுப்பி:உடுப்பி போலீஸ் ஏட்டு தற்கொலை செய்வதற்கு முன் உயர் அதிகாரி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 போலீஸ் ஏட்டு தற்கொலை

உடுப்பி டவுனில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸ் ஏட்டு ராஜேஷ்குந்தர் என்பவர் ஈடுபட்டார். அப்போது அவர், திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் ராஜேஷ் குந்தர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவில்லை. இதனால் இவரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 

 செல்போன் ஆடியோ வைரல்

இந்த நிலையில் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்வதற்கு முன் உயர் போலீஸ் அதிகாரி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அதில் உரையாடலில் ‘தனக்கும், கங்குளி போலீஸ் நிலையத்தை சேர்ந்த துணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சநாயக், ஆயுதப்படை போலீசார் உமேஷ் மற்றும் அஸ்வத் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னை தாக்கினர். இதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தான் போலீஸ் ஏட்டு ராஜேஷ் குந்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த ஆடியோ தொடர்பாக உடுப்பி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்