கோவில் திருவிழாவில் தகராறு;3 பேர் மீது வழக்கு

கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-03 20:46 GMT
பேரையூர்,
 டி.கல்லுப்பட்டியில் உள்ள புது மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர்.அப்போது வன்னிவேலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், அருள்பாண்டி, சத்திரப்பட்டியை சேர்ந்த கக்கன், மற்றும் அடையாளம் தெரியக்கூடிய ஒரு சிலர் ஊர்வலத்தில் இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த விழாக் கமிட்டியை சேர்ந்த பாண்டியன், குமார் ஆகியோர் இடையூறு செய்தவர்களை பார்த்து ஓரமாக விலகி செல்லுங்கள் என்று கூறி உள்ளனர்.. அதற்கு முத்துராமன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் விழா கமிட்டியினரை அவதூறாக பேசி கத்தி, மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார், முத்துராமன், அருள்பாண்டி, கக்கன், மற்றும் ஒரு சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்