பால மாரியம்மன் கோவிலில் பால்குட உற்சவம்

பால மாரியம்மன் கோவிலில் பால்குட உற்சவம் நடைபெற்றது

Update: 2022-05-03 20:32 GMT
கும்பகோணம்
கும்பகோணம் அருகே கொட்டையூர் மூப்பக்கோவில் வாணியத்தெரு பாலமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 24-ந் தேதி  பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காவிரி ஆற்றில் இருந்து திரளாக பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் தீமிதி திருவிழா நடந்தது. இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க பாலமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்