திரவுபதி அம்மன் வீதி உலா

மேலமருத்துவக்குடி திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது

Update: 2022-05-03 20:28 GMT
திருவிடைமருதூர்
கும்பகோணம் அருகே உள்ள மேலமருத்துவக்குடியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தூக்குத் தேரில் அம்மன் வீதி உலா சென்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று ஆடுதுறை வீரசோழன் ஆற்றிலிருந்து திரளான பக்தர்கள் புடைசூழ தேரில் எழுந்தருளிய திரவுபதி அம்மனை 200-க்கும் மேற்பட்டோர் தோளில் சுமந்தவாறு புறப்பட்டனர். அப்போது வழிநெடுக பெண்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். தேருக்கு முன்பாக நாட்டிய குதிரை முன்செல்ல, கேரள செண்டை மேளம், நாதஸ்வரத்துடன் சக்தி கரகத்துடன் அம்மன் வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஆடுதுறை மேலமருத்துவக்குடி இடையே உள்ள ரயில்வே சாலையை கடக்க வேண்டியிருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பகோணம், மயிலாடுதுறை, ஆடுதுறை பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், தீக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

மேலும் செய்திகள்