குளத்தில் இறந்து கிடந்த மலைப்பாம்பு
களக்காடு அருகே மலைப்பாம்பு ஒன்று குளத்தில் இறந்து கிடந்தது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள விநாயகத்தான் குளத்தில் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இந்த குளத்தில் நேற்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இறந்து மிதந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மலைபாம்பு எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.