திருவட்டாரில் போலீஸ் ஏட்டை தாக்கிய ராணுவ வீரர் கைது

திருவட்டாரில் போலீஸ் ஏட்டை தாக்கிய ராணுவ வீரர் கைது

Update: 2022-05-03 19:23 GMT
திருவட்டார், 
திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தை அடுத்த தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜின் ராஜ் (வயது40), ராணுவ வீரர். இவர் தாம்பரம் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பணம் மோசடி புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணை இன்று (புதன்கிழமை) நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதற்கான அழைப்பாணையை கொடுப்பதற்காக திருவட்டார் போலீல் ஏட்டு ஸ்டாலின் (35), தோட்டவாரத்தில் உள்ள விஜின்ராஜின் வீட்டுக்கு சென்றார்.  அப்போது வீட்டில் இருந்த விஜின்ராஜ்க்கும், ஏட்டு ஸ்டாலினுக்கும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதையடுத்து ஏட்டு ஸ்டாலின் போலீஸ் நிலையம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த விஜின்ராஜ், போலீஸ் நிலைய வாசலில் அவரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட சக போலீசார் விரைந்து வந்து ஏட்டு ஸ்டாலினை மீட்டதுடன், விஜின்ராஜை பிடித்து போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு சென்றனர்.
இது குறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜின்ராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்