பிரியாணி செய்யும் போது சிலிண்டரில் கியாஸ் கசிந்து 2 பேருக்கு தீக்காயம்
பிரியாணி செய்யும்போது சிலிண்டரில் கியாஸ் கசிந்ததில் 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
அரக்கோணம்
பிரியாணி செய்யும்போது சிலிண்டரில் கியாஸ் கசிந்ததில் 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாப்பாங்குளம் மசூதி தெருவை சேர்ந்தவர் மபூப்பாஷா (வயது 35). தையல் தொழிலாளி.
இவர் நேற்று ரம்ஜான் பண்டிகைக்காக வீட்டின் வெளியே உறவினர்களுடன் பிரியாணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் பைப்பில் திடீரென தீப்பற்றி கியாஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதில் ஜீன்னஸ் (31), சலீம் (32) ஆகியோருக்கு லேசான தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.