சீரமைக்கப்பட்டது
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை மீன் மார்க்கெட் அருகே உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இதுபற்றிய செய்தி மற்றும் படம் ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் பிரசுரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட, ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் மேலபெருவிளையில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையின் ஓரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் விழிப்புடன் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சோனியா, பெருவிளை.
இருளில் மூழ்கிய சாலை
நாகர்கோவில் வேதநகர் பள்ளி சாலையில் உள்ள 2 மின் விளக்குகள் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியே நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.
ஆபத்தான மின் கம்பம்
இரவிபுதூர்கடைக்கும் புலிப்பனத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு ரேஷன் கடை உள்ளது. அதன் அருகில் உள்ள மின் கம்பத்தின் அவல நிலையை தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த மின்கம்பம் எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்திலேயே அப்பகுதியை மக்கள் கடந்து செல்கிறார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
நடவடிக்கை அவசியம்
மஞ்சாலுமூடு மாலைக்கோடு சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்லவும் சிரமப்படும் நிலை உள்ளது. வாகனத்தில் வேகமாக சென்றால் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனில்குமார், மஞ்சாலுமூடு.
விபத்து அபாயம்
கல்லுக்கூட்டம் பகுதியில் உடையார்விளை ஜங்ஷனில் இரு மரங்கள் உள்ளன. அதில் ஒரு மரம் பட்டுப்போய் உள்ளது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாக்டர் ஸ்ரீராம், உடையார்விளை.
செடி-கொடிகளை அகற்ற வேண்டும்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் செடி-கொடிகள் வளர்ந்து உள்ளது. அதை ஒவ்வொரு ஆண்டும் வெட்டி அகற்றி, சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக செடி-கொடிகள் அகற்றப்படவில்லை. இதனால் அங்கு இருந்து விஷ பூச்சிகள் உள்பட ஏராளமான பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் புகுந்து விடுகிறது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலை மாற செடி-கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமுவேல்தாஸ், பார்வதிபுரம்.