மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கூடங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமம் சுனாமி காலனியை சேர்ந்த ஜான் மகன் காட்வின் (வயது 28). இவர், தான் வசித்து வரும் பகுதிக்கு மின்சாரம் இல்லாத காரணத்தினால் அந்த பகுதி மின்வாரியத்துக்கு தெரிவிக்காமல் தாமே சுயமாக மின்சார டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்இணைப்பு கொடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே காட்வின் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.