பஸ் மோதி தொழிலாளி பலி

வளவனூர் அருகே பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானர்.

Update: 2022-05-03 18:17 GMT
வளவனூர்

வளவனூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 52). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சிறுவந்தாடு கிராமத்துக்கு சென்று காய்கறிகள் வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 பஞ்சமாதேவி மேட்டுத்தெரு வாட்டர் டேங்க் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் வேலாயுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலாயுதம் மனைவி விஜயா(47) கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்