மதநல்லிணக்க ஊராட்சியாக போகலூர் தேர்வு

மதநல்லிணக்க ஊராட்சியாக போகலூர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-05-03 17:50 GMT
பரமக்குடி, 
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போகலூர் ஊராட்சியில் அனைத்து சமுதாய மக்களும் எவ்வித பாகுபாடின்றியும், பிரச்சினைகள் இன்றியும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக அந்த ஊராட்சியை மத நல்லிணக்க ஊராட்சியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான காசோலையை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். மாவட்ட கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், பரமக்குடி ஆர்.டி.ஓ. முருகன், பரமக்குடி  தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர். அரசு வழங்கிய ரூ.10 லட்சம் நிதியின் மூலம் போகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, தண்ணீர் வசதி, மின்விளக்குகள் அமைத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு செலவிடப் படும் என போகலூர் ஊராட்சி தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் கூறினார்.

மேலும் செய்திகள்