இடப்பிரச்சினையால் மோதல்; 5 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினையால் ஏற்பட்ட மோதல் சம்பந்தமாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வேணாநல்லூர் கோவிந்தசாமி மகன் ராமலிங்கம் (வயது 63). அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வினோத்(33). இருவருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ராமலிங்கம், வினோத் ஆகிய இருவரும் தனித்தனியாக தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர். ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் வினோத் மீதும், வினோத் அளித்த புகாரின் பேரில் ராமலிங்கம், ராமலிங்கத்தின் மனைவி ஜோதி(50), மகன்கள் சுரேந்திரகுமார்(34), சுரேஷ்கண்ணன் (35) ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.