தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
நன்னிலத்தில் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம்;
நன்னிலம், குச்சிபாளையம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி. இவருடைய மனைவி கற்பகம் (வயது72), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்தார். இதுகுறித்து நன்னிலம் பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.