நமங்குணம் ஊராட்சியில் 7 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நமங்குணம் ஊராட்சியில் 7 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நமங்குணம் ஊராட்சியில் நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதில் நமங்குணம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மன்னார் சுவாமி ஏரி மற்றும் கோரப்பள்ளம் குளம், மன்னார்கோவில் குளம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்த 7 ஏக்கர் நில ஆக்கிரமிப்பை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி கரைகளை செப்பணிட்டனர்.