பெண் அகதி வீட்டின் கதவை தட்டிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

மது போதையில் பெண் அகதி வீட்டின் கதவை தட்டிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-05-03 17:27 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படை வீரர் அன்பு (வயது34). இவா் நள்ளிரவில் இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அன்புவை பிடித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த சம்பவத்தின் போது அன்பு மது போதையில் இருந்ததாக புகாா் கூறப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப் பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் நேற்று அன்புவை பணி இடைநீக்கம் செய்து ேபாலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்