திருக்கோவிலூர் அருகே கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

திருக்கோவிலூர் அருகே கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-03 17:04 GMT
திருக்கோவிலூர், 
திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளில் முகையூர் அணி முதலிடத்தையும், விளந்தை ஆனந்த் ஏ அணி 2-ம் இடத்தையும், விளந்தை ஆனந்த் பி அணி 3-ம் இடத்தையும், திருக்கோவிலூர் சைலோம் அணி 4-ம் இடத்தையும், விளந்தை வேலவன் நகர் அணி 5-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திருக்கோவிலூர் என்.கே.வி. போஸ்டர்ஸ் உரிமையாளர் என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.  போட்டியை உடற்கல்வி இயக்குனர்கள் சூசைநாதன் மற்றும் சதீஷ் ஆகியோர் முன்னின்று நடத்தினர். 

மேலும் செய்திகள்