‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாய்க்கால் சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் பாசன வாய்க்கால் உள்ளது.அது தற்போது மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. அதன் வழியாக நாள்தோறும் ஏரளானமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் வாகனங்கள் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த வாய்க்காலை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், அரும்பூர்.