மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவிக்கு பிஸ்கட் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர்.