கிணற்றில் தவறி விழுந்து பஸ் டிரைவர் பலி

கிணற்றில் தவறி விழுந்து பஸ் டிரைவர் பலியானார்.

Update: 2022-05-03 17:00 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). தனியார் பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் இரவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற செந்தில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் தேடிப் பார்த்தபோது அருகே உள்ள ஒரு கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது தெரியவந்தது. கிணற்றில் தவறி விழுந்து அவர் இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்