தூக்குப்போட்டு பெண் தற்கொலை
செம்பனார்கோவில் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பொறையாறு:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மேல்பாதி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது25). இவருக்கும், மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த காவியா (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காவியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த கணவர் குடும்பத்தினர், தூக்கில் தொங்கிய காவியாவை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், காவியா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காவியாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகிறார்.