வெயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
வாய்மேடு அருகே 100 நாள் வேலை செய்த போது வெயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த மருதூர் ஊராட்சி திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி நாகம்மாள் (வயது 65).இவர் மருதூர்பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பாசன வாய்க்காலை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெயில் கடுமையாக சுட்டெரித்ததால் நாகம்மாள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.