இந்திய குடியரசு கட்சியினர் மசூதிகளை பாதுகாப்பார்கள்- ராம்தாஸ் அத்வாலே பேச்சு

இந்திய குடியரசு கட்சியினர் மசூதிகளை பாதுகாப்பார்கள் என அதன் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

Update: 2022-05-03 16:40 GMT
படம்
மும்பை, 
இந்திய குடியரசு கட்சியினர் மசூதிகளை பாதுகாப்பார்கள் என அதன் தலைவர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
எதிர்க்கிறோம்
மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை இன்றைக்குள் (புதன்கிழமை) அகற்ற வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்து உள்ளது தொடர்பாக இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவரும், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:- 
மசூதி முன் அனுமன் பஜனை பாடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என நவநிர்மாண் சேனா வலியுறுத்துவதை எதிர்க்கிறோம்.
தொண்டர்கள் பாதுகாப்பு
மசூதிகளில் யாராவது ஒலிப்பெருக்கிகளை அகற்ற முயற்சி செய்தால், இந்திய குடியரசு கட்சி (ஏ) தொண்டர்கள் மசூதிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். ஒலிப்பெருக்கி சத்தத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிபெருக்கிகளை மசூதிகளில் இருந்து அகற்ற பா.ஜனதா ஆதரவு அளிக்கலாம். 
ஒலிப்பெருக்கிகளை அகற்ற ராஜ் தாக்கரே கெடு விதித்தால், எனது கட்சி தொண்டர்கள் மசூதிகளை பாதுகாப்பார்கள். இந்து, முஸ்லிம் இடையே பிரச்சினை வரக்கூடாது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்