கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்

கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்

Update: 2022-05-03 16:02 GMT

கோவை

கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). தொழிலாளி. இவர் அங்குள்ள ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு நேற்று காலையில் சென்றார். அங்கு இளம்பெண் ஒருவர் பணியில் இருந்தார். 

அவரிடம், ராஜ்குமார், பிறந்தநாள் கேக்  வேண்டும் என்று கேட்டு உள்ளார். உடனே அவரை கேக் இருக்கும் இடத்துக்கு இளம்பெண் அழைத்துச்சென்றார்.

 அப்போது அந்த கடைக்குள் வேறு யாரும் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்ட ராஜ்குமார் திடீரென்று அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், கூச்சலிட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ராஜ்குமாரை பிடித்து சாய்பாபாகாலனி போலீசில் ஒப்படைத்தனர். 

இது பலாத்கார வழக்கு என்பதால் அவர், கோவை மாநகர மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்