4 வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

4 வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-05-03 15:58 GMT

கோவை

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள னர். 

கடந்த சில நாட்களாக கணேசனுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டது. 

இதனால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் அவர் உடல்நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தனது மகனிடம் தாய் வீட்டிற்கு சென்று விட்டு  கணேசன் வெளியே சென்றார். 

பின்னர் அவர், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். 

அவர், அந்த கட்டிடத்தின் 4-வது மாடிக்கு சென்று திடீரென்று அங்கிருந்து கீழே குதித்தார். 

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பெரிய கடைவீதி போலீசார் விரைந்து வந்து கணேசனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. 

இது குறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்